நீங்கதான் எல்லாமே

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdbmdPal9GMHhQZmc

நீங்கதான் எல்லாமே
உம் ஏக்கம்தான் எல்லாமே
சித்தம் செய்யணுமே
செய்து முடிக்கணுமே

1. கரங்களை பிடித்தவரே
கைவிட்டு விடுவீரோ
இதுவரை நடத்தி வந்த
எபிநேசர் நீர்தானையா

2. நீரே புகலிடம்
எனது மறைவிடம்
இன்னல்கள் வேதனைகள்
மேற்கொள்ள முடியாதையா

3. என்மேல் கண் வைத்து
அறிவுரை கூறுகின்றீர்
நடக்கும் பாதைதனை
நாள்தோறும் காட்டுகின்றீர்

4. கர்த்தருக்குள் மகிழ்கின்றேன்
களிகூர்ந்து துதிக்கின்றேன்
நீதிமானாய் மாற்றினீரே
நித்தம் பாடுகின்றேன்

5. ஆனந்த தைலத்தினால்
அபிஷேகம் செய்தவரே
துதி உடை போர்த்தி
தினம் துதிக்கச் செய்பவரே

நீர் போதும்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics | Tagged , , , , , , , | Leave a comment

யெஹோவா தேவனுக்கு

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdcmlFNzBNSXI3QVk

யெஹோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதை சொல்லிப் பாடிடுவேன்
கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டிப் பாடிடுவேன்

யெஹோவா ஷாலோம் யெஹோவா ஷம்மா
யெஹோவா ரூவா யெஹோவா ரஃப்ஃபா

1. எல் ரோயீக்கு அல்லேலூயா
என்னை நீரே கண்டீரையா
ஏக்கமெல்லாம் தீர்த்தீரையா
நான் தாகத்தோடு வந்தபோது
ஜீவத்தண்ணீர் எனக்குத் தந்து
தாகமெல்லாம் தீர்த்தீரையா

2. எல் ஷடாயும் நீங்கதாங்க
சர்வ வல்ல தேவனாக
என்னை என்றும் நடத்தினீங்க
எபிநேசரும் நீங்கதாங்க
உதவி செய்யும் தேவனாக
என்னை என்றும் தாங்குவீங்க

3. ஏலோஹிமும் நீங்கதாங்க
என்றும் உள்ள தேவன் நீங்க
எந்த நாளும் பாடுவேங்க
இம்மானுவேல் நீங்கதாங்க
மண்ணில் வந்த தேவன் நீங்க
இன்றும் என்றும் பாடுவேங்க

யெஹோவா தேவன்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | Leave a comment

ஏற்ற காலத்தில் உயர்த்தும்

https://drive.google.com/open?id=1m0FApj7-wREWewHgjpDuUhMSOt2QX3X0

ஏற்ற காலத்தில் உயர்த்தும் உந்தன் கர்த்தர் கரத்தில் அடங்கு
நீதிமானை தள்ளாட வொட்டார்

காக்கும் தேவன் உறங்கமாட்டார்

1. வாலாக்காமல் தலையாக்குவார்
உன்னை கீழாக்காமல்
மேலாக்குவார்
நிச்சயமாய் முடிவு உண்டு

உன் நம்பிக்கை வீண் போகாது

2. தேவரீர் சர்வ வல்லவர்
நீர் செய்ய நினைத்தது
தடைபடாது
என்னோடு கூட இருந்து

என்னை கன்மலையின்மேல் உயர்த்துவார்

3. தூதர்கள் முன்சென்று
உன் பாதைகளை
செவ்வையாக்குவார்
உன் வாஞ்சைகளை நிறைவேற்றுவார்

உன்னை தலை நிமிர்ந்து நடக்கச் செய்வார்

ஏற்ற காலத்தில்

Posted in Uncategorized | Leave a comment

போதும் நீங்க போதும்

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdaVlYOWxWR0ozU0U

போதும் நீங்க போதும்
உம் சமூகம் உம் பிரசன்னம்

எப்போதும் நீர்தானையா
என்முன்னே நீர்தானையா
இயேசையா என் மீட்பரே

1. உம் விருப்பம் செய்வதுதான்
என் வாழ்வின் ஏக்கமையா
இதுதானே என் உணவு
இதற்காகத்தான் உயிர்வாழ்கிறேன்
இயேசையா என் மீட்பரே

2. என் ஆன்மா உம் பிரசன்னத்திற்காய்
ஏங்கி தினம் தவிக்கின்றது
ஜீவனுள்ள என் தேவனே
என் பார்வையெல்லாம் உம்மேல்தானே
இயேசையா என் மீட்பரே

3. உம் சமூகம் வாழ்கின்ற நான்
உண்மையிலே பக்கியவான்
எப்போதும் உம்மைத் துதிப்பேன்
எந்நேரமும் உம்மில் மகிழ்வேன்
இயேசையா என் மீட்பரே

4. இவ்வுலக வாழ்வைவிட
உம் சமூகம் மேலானது
பெலத்தின் மேலே பெலனடைவேன்
வருகையிலே உம்மைக் காண்பேன்
இயேசையா என் மீட்பரே

5. அழுகையெல்லாம் ஆனந்த
நீரூற்றாக மாற்றுகிறீர்
குளங்களெல்லாம் நிரம்புதையா
உம் வல்லமை மழையாலே
இயேசையா என் மீட்பரே

போதும் நீங்க

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics | Tagged , , , , , , , , , | Leave a comment

கர்த்தரை நான் எக்காலத்திலும்

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdOV9JUTl1MkxqTmc

கர்த்தரை நான் எக்காலத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
அவர் புகழ் எப்பொழுதுமே
என் நாவில் ஒலித்திடுமே

ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே

நல்லவர் வல்லவர்
காண்பவர் காப்பவர்

1. ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
எளியோர் இதைக் கேட்டு அககளிப்பார்கள்
இணைந்து துதித்திடுவோம்
அவர் நாமம் உயர்த்திடுவோம்

2. துணை வேண்டி நான் மன்றாடினேன்
மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு
எல்லாவித அச்சத்தினின்றும்
அவர் என்னை விடுவித்தார்

3. ஜீவனை விரும்பி நன்மை காண
நெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ
தீய சொல் வஞ்சக மொழி
நம்மை விட்டு விலக்கிடுவோம்

4. நோக்கிப் பார்த்தேன் முகம் மலர்ந்தேன்
அவமானம் அடைய விடவில்லை
கூவி அழைத்தேன் நான்
செவி சாய்த்து பயம் நீக்கினார்

கர்த்தரை நான்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics | Tagged , , , , , , , , , | Leave a comment

மறவாமல் நினைத்தீரையா

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdY1p6RzVlUVo4SFE

மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே

நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….
கோடி கோடி நன்றி ஐயா

1. எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ எல்ரோயீ
என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன்

2. பெலவீன நேரங்களில்
பெலன் தந்தீரையா
சுகமானேன் சுகமானேன்
தழும்புகளால் சுகமானேன்
என் குடும்ப மருத்துவர் நீரே

3. தடைகளை உடைத்தீரையா
தள்ளாடவிடவில்லையே
சோர்ந்து போன நேரமெல்லாம்
தூக்கி என்னை சுமந்து
வாக்கு தந்து தேற்றினீரே

4. குறைவுகள் அனைத்தையுமே
மகிமையிலே நிறைவாக்கினீரே – என்
ஊழியம் செய்வதற்கு
போதுமான பணம் தந்து
மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்

மறவாமல்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics | Tagged , , , , , | Leave a comment

கலங்கி நின்ற வேளையில்

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdU1FUUzc0RkN5X0U

கலங்கி நின்ற வேளையில்
கைவிடாமல் காத்தீரே
தகப்பனே தகப்பனே
நீர் போதும் என் வாழ்வில்

1. உடைந்த நொந்த உள்ளத்தோடு
அருகில் நீர் இருக்கின்றீர்
தாங்கிடும் பெலன் தந்து
தப்பிச் செல்ல வழி செய்யும்
தகப்பனே தகப்பனே

2. துன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
திருவசனம் தேற்றுதைய்யா
தீமைகளை நன்மையாக்கி
தினம் தினம் நடத்திச் செல்லும்
தகப்பனே தகப்பனே

3. நித்திய அன்பினால் அன்புகூர்ந்து
உம்பேரன்பால் இழுத்துக் கொண்டீர்
காருண்யம் தயவால்
காலமெல்லாம் சூழ்ந்து காக்கும்
தகப்பனே தகப்பனே

Jesus_Lamb3

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics | Tagged , , , , , , | Leave a comment

இம்மானுவேல் – தேவன் நம்மோடே

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdUzJUcDZfWkxMeWc

இரட்சகர் வந்ததால்
இரட்சிப்பும் வந்ததே
மன்னிப்பும் கிடைத்ததே
மறுவாழ்வும் கிடைத்ததே
இம்மானுவேல் தேவன் நம்மோடே

1. பகலிலே மேக ஸ்தம்பமாய்
இரவிலே அக்கினி ஸ்தம்பமாய்
முன்செல்லும் தூதனாய்
வழிநடத்தும் மேய்ப்பனாய்

2. ஆறுகள் நான் கடக்கையில்
அக்கினியில் நான் நடக்கையில்
என்னைத் தூக்கி சுமக்க தகப்பன் என்னோடே
என்னை என்றும் காக்க நேசர் என்னோடே

அல்லேலூயா அவர் இம்மானுவேல்

இம்மானுவேல் என் சபையோடு
இம்மானுவேல் என் தேசத்தோடு
இம்மானுவேல் என் குடும்பத்தோடு

இம்மானுவேல்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment

பெலன் இல்லா நேரத்தில்

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdVTd3b0kwc2dBTHc

பெலன் இல்லா நேரத்தில் புதுப்பெலன் தந்து
என்னை நீர் தாங்கிடுமே
திடன் இல்லா நேரத்தில் திடமனம்
தந்து என்னை நீர் நடத்திடுமே

பெலன் தாருமே – 4
புதுப்பெலத்தால் என்னை நடத்திடுமே

1. எலியாவைப்போல் வனாந்திரத்தில்
களைத்துப்போய் நிற்கின்றேனே
மன்னாவைத் தந்து மறுபடி நடக்க செய்யும்

2. போராட்டங்கள் சூழ்ந்ததாலே
சோர்ந்துபோய் நிற்கின்றேனே
சோராமல் ஓட திடமனம் அளித்திடுமே

3. மனிதர்களின் நிந்தனையால்
மனம்நொந்து நிற்கின்றேனே
மன்னித்து மறக்க உந்தனின் பெலன் தாருமே

4. மாம்ச எண்ணம் மேற்கொள்வதால்
அடிக்கடி தவறுகின்றேனே
பரிசுத்த வாழ்வு வாழ பெலன் தாருமே

பெலன் தாருமே

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics | Tagged , , , , , , , , | Leave a comment

சிலுவையே நல்மரமே

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdM1BNY0ZwRS1GTVU

சிலுவையே நல்மரமே
அதன் நிழல் அடைக்கலமே
கலங்காதே அழுதிடாதே
இயேசு உன்னை அழைக்கிறார்

1. துன்ப நெருக்கடியில்
சோர்ந்து போனாயோ
அன்பர் இயேசு பார்
உன்னை அணைக்கத் துடிக்கின்றார்

2. பாவச் சேற்றினிலே
மூழ்கி தவிக்கின்றாயோ
இயேசுவின் திருரத்தம்
இன்றே கழுவிடும்

3. வியாதி வேதனையில்
புலம்பி அழுகின்றாயோ
இயேசுவின் காயங்களால்
இன்றே குணம் பெறுவாய்

சிலுவை

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , | Leave a comment