http://1drv.ms/1SLPIMr
தேவா உம் நாமத்தைப்
பாடிப் புகழுவேன்
ஆனந்தம் ஆனந்தமே
நீர் செய்த நன்மைகள்
ஆயிரமாயிரம்
ஆனந்தம் ஆனந்தமே
ஏழைகளின் தேவனே
எளியோரின் இராஜனே
திக்கற்ற பிள்ளைகளின் தேவனே
1.கேரூபீன் சேராபீன்கள் ஒய்வின்றிப் பாடிப்போற்ற
துதிக்குப் பாத்திரரே
துதிகளின் மத்தியில் வாசம் செய்திடும்
மகிமைக்குப் பாத்திரரே
ஏழைகளின் தேவனே
எளியோரின் இராஜனே
திக்கற்ற பிள்ளைகளின் தேவனே
2.காற்றையும் கடலையும் அடக்கி அமர்த்திய
அற்புத தேவன் நீரே
அக்கினி மதிலாய் நடுவில் வாசம் செய்யும்
அதிசய தேவன் நீரே
ஏழைகளின் தேவனே
எளியோரின் இராஜனே
திக்கற்ற பிள்ளைகளின் தேவனே
3.வியாதிகள் முழங்கால்கள் முடங்கிப் பணிந்திடும்
உன்னத தேவன் நீரே
நாவுகள் யாவுமே அறிக்கை செய்திடும்
உத்தம தேவன் நீரே
ஏழைகளின் தேவனே
எளியோரின் இராஜனே
திக்கற்ற பிள்ளைகளின் தேவனே
தேவா உம் நாமத்தைப்
பாடிப் புகழுவேன்
ஆனந்தம் ஆனந்தமே
நீர் செய்த நன்மைகள்
ஆயிரமாயிரம்
ஆனந்தம் ஆனந்தமே
Mark 8:36“What good is it for someone to gain the whole world, yet forfeit their soul?”
Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved. |
Pingback: as | Beulah's Blog
Pingback: Songs list | Beulah's Blog