நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல
எழும்பிப் பிரகாசி – 2
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல
எழுந்து ஒளி வீசு – 2
1. உலகின் ஒளியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார்
அவர்க்காய் சாட்சியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார்
கர்த்தரே தேவன் என்று ஜாதிகள் அறிந்திட
சாட்சியாய் நீ வாழ்வாய்
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல
எழும்பிப் பிரகாசி (எழுந்து ஒளி வீசு) – 2
2.அழிகின்ற ஜனங்களை மீட்க தேவன் உன்னை அழைத்தார்
திறப்பின் வாசலில் நிற்க தேவன் உன்னை அழைத்தார்
அறுவடை மிகுதி வேலையாள் குறைவு
தேவ ஊழியம் செய்வாய்
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல
எழும்பிப் பிரகாசி (எழுந்து ஒளி வீசு) – 2
3. இருளின் அதிகாரம் உடைக்க வல்லமை உனக்களித்தார்
பூமியில் அக்கினியை இறக்க வரங்களை உனக்களித்தார்
பாதாளத்தை வெறுமையாக்கி பரலோகத்தை நிரப்ப
திறவுகோல் உனக்களித்தார்
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல
எழும்பிப் பிரகாசி – 2
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல
எழுந்து ஒளி வீசு – 2
எரேமியா 32:17 “ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகாபலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.”
Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved. |
Pingback: as | Beulah's Blog
Pingback: Songs list | Beulah's Blog