அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்

http://1drv.ms/1D75LCN

அப்பா உம்பாதம் அமர்ந்துவிட்டேன்
அன்பின் தகப்பன் நீர்தானையா
செய்த பாவங்கள் கண்முன்னே
வருந்துகிறேன் நான் கண்ணீரோடு

என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்
கல்வாரி இரத்தத்தாலே
நான் பனியைப்போல வெண்மையாவேன்
முற்றிலும் வெண்மையாவேன்
இயேசையா – 4

1. துணிகரமாய் நான் தவறு செய்தேன்
துணிந்து பாவம் செய்தேன்
நோக்கிப் பார்க்க பெலன் இல்லையே
தூக்கி நிறுத்தும் என் தெய்வமே

என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்
கல்வாரி இரத்தத்தாலே
நான் பனியைப்போல வெண்மையாவேன்
முற்றிலும் வெண்மையாவேன்
இயேசையா – 4

2. கிழக்கு மேற்கு உள்ள தூரம்
உந்தன் இரக்கம் உயர்ந்ததையா
இல்லையே எல்லை உம் அன்பிற்கு
இரக்கத்தின் செல்வந்தர் நீர்தானையா

என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்
கல்வாரி இரத்தத்தாலே
நான் பனியைப்போல வெண்மையாவேன்
முற்றிலும் வெண்மையாவேன்
இயேசையா – 4

3. என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால்
உம்முன்னே நிற்க முடியாதையா
தகப்பன் மகனை மன்னிப்பதுபோல்
மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா

என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்
கல்வாரி இரத்தத்தாலே
நான் பனியைப்போல வெண்மையாவேன்
முற்றிலும் வெண்மையாவேன்
இயேசையா – 4

4. முள்முடி கிரீடம் பார்க்கின்றேன்
முகமெல்லாம் இரத்தம் காண்கின்றேன்
ஜீவன் தந்தல்லோ மீட்டீரையா
தேவனே நான் என்ன சொல்வேன்

அப்பா உம்பாதம் அமர்ந்துவிட்டேன்
அன்பின் தகப்பன் நீர்தானையா
கிருபயின்படியே மனமிரங்கி
மீட்பின் மகிழ்ச்சி தந்தீரையா

இயேசையா நன்றி – 4

James 1:21“Therefore, get rid of all moral filth and the evil that is so prevalent and humbly accept the word planted in you, which can save you.”

Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved.

This entry was posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்

  1. Pingback: as | Beulah's Blog

  2. Pingback: Songs list | Beulah's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s