https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiTC8u_nVHsoGOl_O
சகல ஜனங்களே கைகொட்டி தேவனை
கெம்பீர சத்தத்தோடே ஆர்ப்பரித்திடுவோமே
1. உன்னதமானவராகிய கர்த்தர்
எந்நாளும் அதிசயமானவராமே
மண்ணெங்கும் மகத்துவமான இராஜாவாம்
மகிழ்ந்து பாடிடுவோம்
2. போற்றி போற்றி பாடிடுவோமே
தேற்றி நம்மைக் காத்திடும் தேவனை
ஊற்றிடுவாரே ஆவிதனையே
சாற்றிடுவோம் துதியே
3. தாழ்வில் நம்மை நினைத்த தேவனை
வாழ்நாள் முழுவதும் வாழ்த்தியே துதிப்போம்
துதிகளின் பாத்திரர் தூயாதி தூயோனை
துதித்து உயர்த்திடுவோம்
4. தேவாதி தேவன் ஆர்ப்பரிப்போடே
கர்த்தாதி கர்த்தன் எக்காளத்தோடும்
பிரதான தூதனுடைய சத்தத்தோடும்
எழுந்தருளி வருவார்
5. அநேக ஸ்தலங்கள் அங்கேயும் உண்டு
அதிலொன்று நமக்காய் ஆயத்தம் பண்ணி
அழைக்கவே வருவார் அனுதினமும்
அல்லேலூயா பாடுவோம்
1 John 1:7“But if we walk in the light, as He is in the light, we have fellowship with one another, and the blood of Jesus, His Son, purifies us from all sin.” |
Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved.
Reblogged this on Saint Pentecostal Church.
Pingback: Songs list | Beulah's Blog