கர்த்தாவே உம் கிருபை
எவ்வளவு எனக்கு அருமை
நான் உமது செட்டைகளின்
நிழலில் வந்து அடைவேன் – 2
1. பறந்து காக்கும் பட்சி நீர்
பாதுகாப்பாய் நான் இருப்பேன் – 2
தீவிரமாய் இன்று இரங்கிடுவீர்
கடந்து வந்து விடுவிப்பீர் – 2
2. செங்கடல் தடை செய்ய முடியாது
எரிகோ எதிர் நிற்க முடியாது
யோர்தான் வழிகளை திறந்திடுமே
கன்மலை உச்சியில் வந்திடுவேன்
3. நானும் ஆசி பெற்றவனே
என்னை சபிக்க யாராலும் முடியாது
காயங்கள் அடிகள் பிலேயாமுக்கே
காக்கும் செட்டையில் நானிருப்பேன்
4. வளர்ந்து பெருகிப் படர்ந்திடுவேன்
பரவிப் பாய்ந்து ஓடிடுவேன்
காருண்யம் என்னைப் பெரியவனாக்கும்
கிருபை என்னைத் தினம் உயர்த்தும்
Psalm 119:60“I will hasten and not delay to obey Your commands.”
Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved. |
Pingback: Songs list | Beulah's Blog