http://www.mboxdrive.com/p/7yWkp1JgHV/
இஸ்ரவேலின் துதிக்குள்
வாசம் பண்ணும் தேவனே
இந்நேரம் அடியாரின்
துதிகள் மத்தியிலே இறங்கி வந்திடுமே
1. உம் வாசல்களில் துதியோடும்
உம் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும்
உம்மைத் துதித்திடவே பிரவேசித்திட்டோம்
உம் நாமத்தை ஒருமித்துமே
உயர்த்தியே போற்றுகிறோம் (2)
2. இஸ்ரவேலின் எக்காளம் மகா
ஆரவாரத்து முழக்கத்தின் முன்
எரிகோவின் அலங்கம் விழுந்தது போல்
இப்போ சத்துருவின் கோட்டைகளை
இடித்து தகர்த்திடுமே (2)
3. எதைக் குறித்தும் கவலைப்படாமல்
எல்லா விண்ணப்பமும் ஏறெடுங்கள்
என்றும் ஸ்தோத்திர ஜெப வேண்டுதலோடு
இப்போ எல்லா புத்திக்கும் மேலான
உம் சமாதானம் ஈந்திடுமே (2)
4. உம் கிருபையின் மகிமைக்குமே
எம்மை புகழ்ச்சியாய் முன்குறித்தீர்
எம் சுதந்தரத்தின் அச்சாரமாக
எம்மை மீட்கவே முத்தரித்தீரே
உம் ஆவியானவரால் (2)
Deuteronomy 18:15“The LORD your God will raise up for you a Prophet like me from among you, from your fellow Israelites. You must listen to Him.”
Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved. |