நீர் எனக்கு வேண்டுமையா
நீர் எனக்குப் போதுமையா
உம்மை ஆராதிக்க
உம்மை துதித்திட
உம்மை வாழ்த்திட
நீர் எனக்கு வேண்டுமையா
1. தாயின் கர்ப்பத்திலே என்னை அறிந்தவரே
தகப்பன் சுமப்பது போல் சுமந்து வந்த தெய்வம் நீரே
அப்பாவும் அம்மாவுமாய் நீரே போதும் ஐயா
2. உமது சமூகத்தில் செலவிடும் நேரமெல்லாம்
எனது ஆவி ஆத்துமா உம்மில் தானே மகிழுதையா
உம்மை ஆராதித்து சுகமாய் வாழ்ந்திடுவேன்