பகல்நேரப் பாடல் நீரே
இரவெல்லாம் கனவும் நீரே
மேலான சந்தோஷம் நீரே
நாளெல்லாம் உமைப் பாடுவேன்
1.எருசலேமே உனை மறந்தால்
என் வலக்கரம் செயலிழக்கும்
மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்
நாவு ஒட்டிக்கொள்ளும்
மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானையா
மணவாளனே உமை மறவேன்
2. தாய்மடி தவழும் குழந்தைப்போல்
மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்
இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்
உம்மைத்தான் நம்பியுள்ளேன்
3. கவலை பெருகி கலங்கும்போதும்
மகிழ்வித்தீர் உம் அன்பினால்
கால்கள் சறுக்கி தடுமாறும்போது
தாங்கினீர் கிருபையினால்
4. பார்வையில் செருக்கு எனக்கில்லை
இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை
பயனற்ற உலகத்தின் செயல்களிலே
பங்கு பெறுவதில்லை
Hi there, thanks for uploading this lyrics, i was in search of it for a long. Almighty GOD bless you
Thank you, brother. God bless you, too.