என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது
ஆஹா ஓஹோ ஓ…ஓ…ஓ
நான் இராஜாவைக் குறித்து பாடின கவியை சொல்லுகிறேன்
என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி
1. எனக்காக யாவையுமே செய்து முடிப்பாரே
துவக்கத்தையும் முடிவையும் அவரே தருவாரே
2. இருளான இரவினிலே கண்ணீர் விட்டேனே
பகல் உதிக்க காலையிலே நடனம் செய்தேனே
3. வார்த்தையினால் சத்துருவை இயேசு ஜெயித்தாரே
அவர் வார்த்தையினால் சாத்தானை (இச்சைகளை)நானும் ஜெயிப்பேனே