உம்மை ஆராதிக்க தான் என்னை அறிந்தீர்
உம்மை ஆர்ப்பரிக்க தான் என்னை அழைத்தீர்
உந்தன் நாமம் உயர்த்தவே என்னில் ஜீவன் கொடுத்தீர்
உம்மை பற்றிக்கொள்ள தான் என்னைப் படைத்தீர்
1. ஏழு விண்மீன் கைதனில்
பொன் விளக்கு மத்தியில்
உலாவிடும் உன்னதர்
நீரே உமக்கு நிகர்
முந்தினவரும் நீர்தான்
பிந்தினவரும் நீர்தான்
மரித்தவரும் நீர்தான்
மூன்றாம் நாளில் உயிர்பெற்று வாழ்கின்ற வேந்தன்
2. எப்பக்கமும் கூர்மையும்
பட்டயம் பற்றினீரோ
கண்கள் அக்கினி ஜூவாலையோ
பாதங்கள் வெண்கலமோ
தேவ ஆவி ஏழுண்டு
விண்மீன்களும் ஏழுண்டு
எல்லாம் இயேசுவில் உண்டு
அப்பேர்பட்ட அழகுள்ள ஆண்டவர் மைந்தன்
3. பரிசுத்தர் நீர்தானே
சத்தியரும் நீர்தானே
தாவீதின் திறவுகோல்
கொண்டவரும் நீர்தானே
நீர் பூட்டிய வாசலை
மானிடன் திறப்பானோ
நீர் திறந்த வாசலை
பூட்டி வைக்கக் கூடுமோ
நீர் ஆள்கின்றீர் என்றும்
4. உண்மையும் சத்தியமும்
உள்ளடங்கும் சாட்சியே
தேவனின் சிருஷ்டிக்கு
ஆதியே ஆமென் நீரே
நீதியுள்ள நாதனே
நீர் என்றும் நித்தியரே
ஆலயத்தின் ஆண்டவா
ஆராதனை நாயகா நீர்
வாழ்க வாழ்க என்றும்
அப்பா பிதாவே நான் உம்மை துதிப்பேன்
எந்தன் ஆத்ம நேசரே நான் உம்மை துதிப்பேன்
பரிசுத்த ஆவியே என்றும் உம்மை துதிப்பேன்
மூன்றில் ஒன்றாய் விளங்கும் என் தேவ தேவனே