நீர் தந்த இந்த வாழ்வை
உமக்கென்றும் அர்ப்பணிப்பேன்
இயேசு தேவா கிறிஸ்து நாதா
உம்மை என்றும் மறவேனே – 2
1. இரு கைகள் உம்மை வணங்கி
என்றும் தொழுகை செய்திடுமே
இரு கால்கள் சுவிசேஷம்
எங்கும் பரப்ப செய்திடுமே – 2
2. எந்தன் ஆஸ்தி எந்தன் செல்வம்
யாவும் உமக்கே தந்திடுவேன்
எந்தன் உள்ளம் எனதாவி
யாவும் உமக்கே ஈந்திடுவேன்