கர்த்தரை நம்பு உன் வாழ்வு மாறும்
கர்த்தரை நம்பு உன் வாழ்வு செழிக்கும்
கவலை எல்லாம் கர்த்தரின் மேலே
வைத்திடு நீ கலங்காதே
எல்லா ஜாதிகளிலும் உன்னை உயர்த்துவார்
நீ கீழாகாமல் என்றும் மேலாவாய்
1. கர்ப்பத்தின் கனியும் நிலத்தின் கனியும்
ஆசீர்வாதம் அடைந்திடுமே
கூடையும் மா பிசையும் தொட்டியும்
ஆசீர்வாதம் அடைந்திடுமே
2. போகும்போதும் வருகின்றபோதும்
ஆசீர்வாதம் உன்னைத் தொடரும்
சத்துருவை என்றும் துரத்தும் தேவன்
உனக்கு முன்னே சென்றிடுவார்
3. கையிடும் எல்லா வேலைகள் அனைத்திலும்
கர்த்தரின் ஆசி உனக்கு உண்டு
பூமியில் வாழும் ஜாதிகள் எல்லாம்
உனக்குள் ஆசி பெற்றிடுவார்