1. ஆராதிப்பேன் நான்
ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி
இயேசையா புகழ் பாடி
என்னை மறப்பேன்
நான் நம்பும் நம்பிக்கையே பாடுவேன் அல்லேலூயா
ஓசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன்
நீதியின் தேவனே வெற்றியின் தேவனே
என் பட்சமாக யுத்தம் செய்தீரே
நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே
என் பாடலுக்குச் சொந்தக்காரரே
பாடு அல்லேலூ – 4 பாடு அல்லேலூ அல்லேலூயா
2. குப்பைக்குள் கிடந்தேன்
நான் தூசியாக இருந்தேன்
இயேசையா கரம் நீட்டி
தூக்கி விட்டீரே
3. துக்கத்தில் இருந்தபோது
கலக்கத்தோடு நடந்தபோது
அப்பா உம் கைகள் என்னை
தூக்கி வந்ததே
4. காலங்கள் கடந்து சென்று
நாட்கள் எல்லாம் மாறிட்டாலும்
நீர் செய்த நன்மையை
நான் என்றும் நினைப்பேன்