இயேசுவே உம்மைப்போல் ஆக
வாஞ்சிக்குதே என் உள்ளம்
1. பாவம் அறியாது பாவமே செய்யாது
பாரினில் ஜீவித்தீரே
பரிசுத்தர் உம்மைப் போல் ஜீவிக்கவே
பெலனதை தாரும் ஐயா – உந்தன்
2. சிலுவை சுமந்தென்றும் என் பின்வராதவன்
அல்ல என் சீஷன் என்றீர்
எந்தன் சிலுவையை நான் சுமக்க
பெலனதை தாரும் ஐயா – உந்தன்
3. உபத்திரவம் உண்டு உலகினில் என்றீர்
உலகத்தை வென்றேன் என்றீர்
உம்மைப்போல் உலகினை ஜெயித்திடவே
உம்மைப்போல் மாற்றும் ஐயா – என்னை