என் மேய்ப்பர் நீர்தானையா
எனக்கென்றும் குறையே இல்லை
நான் ஏன் கலங்கணும்
என் ஆயன் இருக்கையிலே
1. நீதியின் பாதையில்
நடத்திச் செல்கின்றீர்
உம் மகிமை விளங்கும்படி
2. ஆத்துமா தேற்றுகிறீர்
ஆவி பொழிகின்றீர்
புது உயிர் தருகின்றீர்
3. எதிரிகள் கண்முன்னே
வெற்றி தருகின்றீர்
விருந்து படைக்கின்றீர்
4. நிச்சயமாகவே
வாழ்நாள் முழுவதும்
உம் கிருபை பின்தொடரும்