அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டு
இன்பமாக அவர் பாதையோடே
தாமே வழியும் சத்தியமும் ஜீவனுமே
1.துன்பப்பெருக்கிலே சோர்ந்திடாதே
அன்பர் அறியாமல் வந்திடாதே – 2
கண்விழிப்போல் நான் காத்திடுவேன் என்றனரே – 2
2.முட்செடிப்போல பற்றிடுமே
மோசமடையாய் நீ முற்றிலுமே
ஏங்கிடாதே நீ நேசர் அதில் தோன்றுவாரே
3.சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
வியாகுலம் உன்னை நெருக்கிடினும்
ஆ நேசரே தம் இன்ப சத்தம் ஈந்திடுவார்
4.மாயையான இந்த லோகமதில்
மாய்ந்தழியும் இம்மாந்தர் அன்பு
நேற்றின் றென்றெனும் மாறிடாரே எந்நேசரே