https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXig8XNDYsMbewRxky
1. திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா
கேட்டு உம்மை அண்டினேன்
இன்னும் கிட்டி சேர என் ஆண்டவா
ஆவல் கொண்டிதோ வந்தேன்
இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக்கொள்ளுமேன்
பாடுபட்ட நாயகா
இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக்கொள்ளுமேன்
ஜீவன் தந்த இரட்சகா
2. என்னை முற்றுமே இந்த நேரத்தில்
சொந்தமாக்கிக் கொள்ளுமேன்
உம்மை வாஞ்சையோடெந்தன்
உள்ளத்தில் நாடி தேடச் செய்யும்
3. திருப்பாதத்தில் தங்கும்போதெல்லாம்
பேரானந்தம் காண்கின்றேன்
உம்மை நோக்கி வேண்டுதல் செய்கையில்
மெய்ச் சந்தோஷ மாகிறேன்
4. இன்னும் கண்டிராத பேரின்பத்தை
விண்ணில் பெற்று வாழுவேன்
திவ்ய அன்பின் ஆழமும் நீளமும்
அங்கே கண்டானந்திப்பேன்