https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXhCQlZCAjyYdHyOSV
எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன்
தாகமாயிருக்கிறேன்
ஜீவனுள்ள தேவன்மேலே
தாகமாயிருக்கின்றேன்
அதிகமாய் துதிக்கின்றேன்
தாகமாய் இருக்கின்றேன்
1. தண்ணீருக்காய் மானானது
தாகம் கொள்வதுபோல்
என் ஆன்மா உம்மைத்தானே
தேடித் தவிக்கிறது
இரட்சகரே உம் வருகையிலே
நிச்சயமாய் உம்முகம் காண்பேன்
2. ஆத்துமாவே நீ கலங்குவதேன்
சோர்ந்து போவது ஏன்
கர்த்தரையே நம்பியிரு
அவர் செயல்கள் நினைத்துத் துதி
3. காலைதோறும் உம் பேரன்பைக்
கட்டளையிடுகிறீர்
இரவு பகல் உம் துதிப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது