https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXglLTi2r4Ub0Rvm7K
அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்
இந்த லேசான உபத்திரவம்
சோர்ந்து போகாதே – நீ
1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்க படுகின்ற நேரமிது
2. ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே
3. காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம்
4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே
5. மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம்
6. மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார்