https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiQYHgBLtmuv-LgrP
பயப்படாதே என் மகனே
பயப்படாதே என் மகளே
பிரியமானவனே நீ பயப்படாதே
பிரியமானவளே சோர்ந்து போகாதே
பிரச்னைகள் உன்னை சூழ்ந்தாலும்
போராட்டங்கள் உன்னை சுற்றி பெருகினாலும்
பயப்படாதே
உன் சத்ருக்கள் உனக்கு விரோதமாய்
ஒரு வழியாய் இன்று வந்தாலும்
ஏழு வழியாய் ஓடிப்போவார்கள்
உன் கண்களாலே நீ அதை காண்பாய்
உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்
வாய்க்காதே போகச்செய்வேன்
உன்னோடு கூட இருந்து
நானும் செய்திடும்
காரியங்கள் பயங்கரமாய் இருக்கும்
உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன்
உன்னை பெருகவே பெருகச் செய்வேன்
என் பிரசன்னத்தால் உன்னை நிரப்புவேன்
என் கரங்களால் உன்னை மூடுவேன்
நீ என்னோடு கூட நடப்பாய் என் பிள்ளையாய்
இருதயத்தை குளிரச்செய்வாய்
உனக்காக ஒரு பந்தியை
ஆயத்தமாக வைத்திருக்கிறேன்
உன்னோடு கூட இருந்து
நானும் செய்திடும்
காரியங்கள் பயங்கரமாயிருக்கும்
நீ தண்ணீரை கடக்கும்போது பயப்படாதே
சோதனை பெருகும்போது சோர்ந்து போகாதே
கன்மலை வெடிப்பிலே பாதுகாப்பேன்
என் கரத்தின் நிழலினால் மூடுகின்றேன்
புதிய காரியம் இன்று செய்வேன்
இன்றைக்கே நீ அதை காண்பாய்
உன் மனவிருப்பமெல்லாம் நிறைவேற்றுவேன்
இரட்டிப்பான நன்மை காண்பாய்
உன்னோடு கூட இருந்து
நானும் செய்திடும்
காரியங்கள் பயங்கரமாயிருக்கும்