ஆண்டவரே உம் பாதம்

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdbHVzRkU4SVFzZWc

ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
அடிமை நான் ஐயா
ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்
அகன்று போகமாட்டேன்
உம்மைவிட்டு அகன்று போகமாட்டேன்

1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டு
அதன்படி நடக்கின்றேன்
உலகினை மறந்து உம்மையே நோக்கி
ஓடி வருகின்றேன்

2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்
நன்கு புரியும்படி
தேவனே எனது கண்களையே
தினமும் திறந்தருளும்

3. வாலிபன் தனது வழிதனையே
எதனால் சுத்தம் பண்ணுவான்
தேவனே உமது வார்த்தையின்படியே
காத்துக் கொள்வதனால்

4. நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும்
தீபமே உம் வசனம்
செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே
தேவனே உம் வாக்கு

5. தேவனே உமக்கு எதிராய் நான்
பாவம் செய்யாதபடி
உமதுவாக்கை என் இருதயத்தில்
பதித்து வைத்துள்ளேன்

ஆண்டவரே உம் பாதம்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , | Leave a comment

பேசு சபையே பேசு

https://drive.google.com/file/d/0BzYcjgTVhUWdcE1hMGgxZTRfcjg/view?usp=sharing

பேசு சபையே பேசு – 4

இது உலர்ந்த எலும்புகள்
உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்
இது தள்ளாடும் முழங்கால்கள்
புதுபெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள்
இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள்
இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள்

1. நரம்புகள் உருவாகும் எலும்புகள் ஒன்று சேரும்
தசைகளும் புதிதாக தோன்றும்
ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும்
புது ஜீவன் உனக்குள்ளாய்த் தோன்றும்

2. மேகங்கள் சூழ்ந்திடவே இரைச்சலும் பெருகிடவே
பெருமழை தேசத்தில் பெய்யும்
கல்வாரி இரத்தத்தாலே ஜாதிகள் மீட்கப்பட்டு
கர்த்தரை தெய்வமாக வணங்கும்

3. ஜாதிகள் நடுங்கிடவும் தேசங்கள் வியந்திடவும்
கர்த்தரின் கிரியைகள் தோன்றும்
மரித்தோர் பள்ளத்தாக்கில் துதிக்கின்ற சேனை ஒன்று
கர்த்தரின் ஜீவன் பெற்று எழும்பும்

ஜீவனை பேசு… இரட்சிப்பைப் பேசு…
சுவாசத்தைப் பேசு… அற்புதத்தைப் பேசு
சபையே நீ எழும்பிடு காற்றே நீ வீசிடு
போற்று சபையே போற்று

பேசு சபையே

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics | Tagged , , , , , , , , | Leave a comment

நாளைய தினத்தை

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdUTRTUklsNVMtSlE

நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார்

1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்
எதற்கும் பயப்படேன்
அவரே எனது வாழ்வின் பெலனானார்
யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா

2. கேடுவரும் நாளில் கூடாரமறைவினிலே
ஒளித்து வைத்திடுவார்
கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்
கலக்கம் எனக்கில்லை-அல்லேலூயா

3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
கர்த்தர் சேர்த்துக் கொள்வார்
கர்த்தருக்காய் நான்தினமும் காத்திருப்பேன்
புது பெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா

4. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன்
அதையே நாடுவேன்
வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில்
வல்லமை பெற்றிடுவேன் – அல்லேலூயா

5. சிங்கக் குட்டிகள் பட்டினி கிடந்தாலும்
எனக்கோ குறையில்லை
குறைகளையெல்லாம் நிறைவாக்கித் தந்திடுவார்
கொஞ்சமும் பயமில்லை – அல்லேலூயா

நாளைய தினம்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | Leave a comment

Please be patient!

Hi everyone, I am moving from Onedrive to Google Drive. So, please be patient with me. I will be online back soon. May the Name of our LORD Jesus Christ alone be glorified.

Posted in Uncategorized | Leave a comment

இயேசு நம்மோடு

https://drive.google.com/file/d/0BzYcjgTVhUWdb2V4YThaYU5rTEk/view?usp=sharing

இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்
இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா அகமகிழ்வோமே

1. காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும்
கர்த்தர் ஒளியாவார்
ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்
உலகின் ஒளிநாமமே

2. வியாதிகள் தொல்லைகள் நடுவினிலே
தேவனின் வார்த்தை உண்டு
அவரின் தூய தழும்புகளால்
குணம் அடைகின்றோம் நாம்

3. மனிதர்கள் நம்மை இகழ்ந்தாலும்
மனமோ தளர்வதில்லை
கோதுமை மணிபோல் மடிந்திடுவோம்
சிலுவையைச் சுமந்திடுவோம்

இயேசு நம்மோடு

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , | Leave a comment

கல்வாரி சிநேகம்

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdSnhsOEJfRzcyUWc

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும்

1. காலங்கள்தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு இன்னமும்
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்
கும்பிடுவோரை குணமாக்கும் தெய்வம்

2. இருண்டதோர் வாழ்வு இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண
இராஜா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்
என்னைக் காணுவோர் உம்மை காணட்டும்

3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா
நீர் பெருகவும் நான் சிறுகவும்
தீபத்தின் திரியாய் எடுத்தாட் கொள்ளும்

கல்வாரி சிநேகம்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , | Leave a comment

இதுவரை நடத்தி

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiTUUG0SyXl7Kf6Gx

இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா (2)

தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்
மதிலை தாண்டினேன் உம் பலத்தால் (2)

நன்றி நன்றி ஐயா
உம்மை உயர்த்திடுவேன்

1. ஆபத்து நாளில் அனுகூலமான
துணையுமானீரே நன்றி ஐயா (2)

2. உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து
எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா (2)

3. அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
பயண்படச் செய்தீரே நன்றி ஐயா (2)

4. கிருபைகள் தந்து ஊழியம் தந்து
உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா (2)

இதுவரை நடத்தி

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , | Leave a comment

சுமந்து காக்கும் இயேசுவிடம்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXgXao_X8iATioweSO

சுமந்து காக்கும் இயேசுவிடம்
சுமைகளை இறக்கி வைத்திடுவோம்

1. தாயின் வயிற்றில் தாங்கியவர்
தலை நரைக்கும் வரை தாங்கிடுவார்
விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோ
வியாதிகள் தீமைகள்வென்றுவிட்டோம்

2. ஆயன் ஆட்டை சுமப்பது போல்
ஆண்டவர் நம்மைச் சுமக்கின்றார்
பசும்புல் மேய்ச்சல் நமக்குண்டு
பயப்படாதே சிறுமந்தையே

3. கண்ணின் மணிபோல் காக்கின்றார்
கருத்தாய் நம்மைப் பார்க்;கின்றார்
கழுகு போல் சிறகின் மேல் வைத்து
காலமெல்லாம் நம்மைச் சுமக்கின்றார்

சுமந்து காக்கும்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , | Leave a comment

நான் மன்னிப்படைய

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiE9Yt_TwssnIOHEk

நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்
மீட்படைய நொறுக்கப்பட்டீர்
நீதிமானாக்க பலியானீர்
நித்திய ஜீவன் தந்தீர்

அன்பே பேரன்பே

1. காயப்பட்டீர் நான் சுகமாக
என் நோய்கள் நீங்கியதே
சுமந்து கொண்டீர் என் பாடுகள்
சுகமானேன் தழும்புகளால்

இம்மானுவேல் இயேசு ராஜா
இவ்வளவாய் அன்புகூர்ந்தீர்

2. சாபமானீர் என் சாபம் நீங்க
மீட்டீரே சாபத்தினின்று
ஆபிரகாமின் ஆசிர்வாதங்கள்
பெற்றுக்கொண்டேன் சிலுவையினால்

3. ஏழ்மையானீர் சிலுவையிலே
செல்வந்தனாய் நான் வாழ
பிதா என்னை ஏற்றுக்கொள்ள
புறக்கணிக்கப்பட்டீரையா

4. மகிமையிலே நான் பங்கு பெற
அவமானம் அடைந்தீரையா
ஜீவன் பெற சாவை அடைந்தீரையா
முடிவில்லா வாழ்வு தந்தீர்

சிலுவை

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics | Tagged , , , , , | Leave a comment

இன்ப கீதம் துன்ப நேரம்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXihKh0iOGfcdYkm8f

இன்பகீதம் துன்பநேரம் ஈந்தீரே என் இயேசுவே
கொல்கொதா பாதை சிலுவை சுமந்தே
கர்த்தாவே உம்மண்டை வந்தேன்

1. பெருவெள்ளத்தின் புகலிடம் நீரே
பெரும் கன்மலை நிழலே
வீசிடும் கொண்டல் காற்றுக்கு ஒதுக்கே
வற்றாத நீருற்றும் நீரே

2. ஊளையிடும் ஓர் பாழும் நிலத்தில்
ஊக்கமுடன் என்னைத் தேடி
கண்டு உணர்த்தி கைதாங்கி நடத்தி
கண்ணின் மணிபோலக் காத்தீர்

3. துஷ்ட மிருகம் என்னை எதிர்த்தும்
கஷ்டம் வராது என்னை காத்தீர்
மந்தையின் மேய்ப்பன் தாவீதின் தேவன்
எந்தை என் தந்தையும் நீரே

4. போராட்டமான போன வாழ்நாளில்
நீரோட்டம் மோதும் இன்னலில்
முற்றுமுடிய வெற்றி அளித்தீர்
குற்றம் குறை நீக்கிக் காத்தீர்

5. உந்தன் சரீர பெலவீன நேரம்
எந்தன் கிருபையே போதும்
என்று உரைத்து என்னை அணைத்து
எத்தனையோ நன்மை செய்தீர்

6. கல்வாரி பாதை தோல்வியில்லையே
கர்த்தாவே முன்னோடி நீரே
உம் பின்நடந்தே உம்மை தொடர்ந்தே
உன்னத வீட்டை அடைவேன்

7. அழைத்தவரே உண்மையுள்ளோரே
அப்படியே ஜெயம் ஈவார்
இயேசுவே உம்மால் ஜெயம் அருளும்
எங்கள் பிதாவுக்கு ஸ்தோத்திரம்

கல்வாரி

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics | Tagged , , | Leave a comment