https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdOV9JUTl1MkxqTmc
கர்த்தரை நான் எக்காலத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
அவர் புகழ் எப்பொழுதுமே
என் நாவில் ஒலித்திடுமே
ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே
நல்லவர் வல்லவர்
காண்பவர் காப்பவர்
1. ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
எளியோர் இதைக் கேட்டு அககளிப்பார்கள்
இணைந்து துதித்திடுவோம்
அவர் நாமம் உயர்த்திடுவோம்
2. துணை வேண்டி நான் மன்றாடினேன்
மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு
எல்லாவித அச்சத்தினின்றும்
அவர் என்னை விடுவித்தார்
3. ஜீவனை விரும்பி நன்மை காண
நெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ
தீய சொல் வஞ்சக மொழி
நம்மை விட்டு விலக்கிடுவோம்
4. நோக்கிப் பார்த்தேன் முகம் மலர்ந்தேன்
அவமானம் அடைய விடவில்லை
கூவி அழைத்தேன் நான்
செவி சாய்த்து பயம் நீக்கினார்