https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXhzbUaqN9RbS7tnv4
எங்கள் பிதாவே
இயேசு இரட்சகரே
தூய ஆவியானவரே
உம்மைத் தொழுகிறோம்
1. சர்வத்தையும் படைத்தவர் நீர்தானே
சாவாமை உள்ளவர் நீர்தானே – 2
ஆதியும் அந்தமும் நீர்தானே – 2
ஆராதனைக்குரியவர் நீர்தானே – 2
2. சர்வ வல்ல தேவன் நீர்தானே
சாரோனின் ரோஜா நீர்தானே
சேனைகளின் கர்த்தர் நீர்தானே
திரியேக தேவனும் நீர்தானே
3. அதிசயமானவர் நீர்தானே
ஆலோசனைக்கர்த்தர் நீர்தானே
மகிமையின் இராஜா நீர்தானே
மாறாத நேசர் நீர்தானே